You are currently viewing Warren Buffett-ன் வெற்றி ரகசியம்: பெஞ்சமின் கிரஹாமின் 7 பொன்னான விதிகள்
Value Investing in Tamil

Warren Buffett-ன் வெற்றி ரகசியம்: பெஞ்சமின் கிரஹாமின் 7 பொன்னான விதிகள்

Value Investing in Tamil – The Intelligent Investor Book Summary in Tamil

Value Investing in Tamil பற்றிய முழுமையான வழிகாட்டியை நாம் பார்க்கப் போகிறோம். உலகத்தின் டாப் பில்லியனர்களில் ஒருவரான வாரன் பஃபெட் எப்படி இந்த நிலையை அடைந்தார் என்ற ரகசியத்தை எளிய முறையில் தெரிந்துகொள்ளலாம். இன்று மார்க்கெட்டில் நிறைய அல்காரிதம் வர்த்தகம், ஆப்ஷன்ஸ் வர்த்தகம் மற்றும் மேக்ரோ எகனாமிக்ஸ் என பல சிக்கலான விஷயங்கள் உள்ளன. ஆனால், வரலாற்றிலேயே மிகச் சிறந்த முதலீட்டாளரான வாரன் பஃபெட்டின் முதலீட்டு உத்தி மிகவும் எளிமையானது. 1949-ல் வெளியான ஒரே ஒரு புத்தகத்தைப் பின்பற்றிதான் அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார். அந்தப் புத்தகம், கொலம்பியா பிசினஸ் ஸ்கூல் பேராசிரியர் பெஞ்சமின் கிரஹாம் எழுதிய “The Intelligent Investor” ஆகும்.

1950-ல் அவருக்கு 19 வயது இருக்கும்போது இந்தப் புத்தகத்தைப் படிக்கிறார். அதற்கு முன்பு வரை வாரன் பஃபெட் மார்க்கெட்டில் சும்மா யூகித்து, சார்ட்டைப் பார்த்து, தொழில்நுட்ப பகுப்பாய்வு செய்துதான் முதலீடு செய்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கே உள்ளூர ஒரு உணர்வு இருந்தது, ‘நாம் பண்றது உண்மையான முதலீடு இல்லை, சும்மா சூதாட்டம் மாதிரி பண்றோம்’ என்று. அந்த நேரத்தில்தான் இந்தப் புத்தகம் அவர் கைக்கு கிடைக்கிறது. எந்த ஒரு சிக்கலான கணித சூத்திரமும் இல்லாமல், மிகவும் நடைமுறை சார்ந்த வணிக அணுகுமுறையை அந்தப் புத்தகம் கற்றுக்கொடுத்தது.

1. The Subordination of Intellect to Emotional Discipline (உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல்)

அதாவது, உங்கள் அறிவை விட உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதுதான் ரொம்ப முக்கியம். பங்குச்சந்தையில் வெற்றிகரமாக முதலீடு செய்ய, உங்களுக்கு 160 IQ இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. உங்ககிட்ட இன்சைடர் இன்ஃபர்மேஷன் இருக்கணும்னு அவசியம் இல்லை. முதலீடு அப்படிங்கிறது ஒரு சவுண்ட் இன்டலெக்சுவல் பிரேம்வொர்க், அதோட சேர்த்து எமோஷனல் டிசிப்ளின். இது ரெண்டும் சேர்ந்ததுதான்.

மார்க்கெட் சரியும்போது பயந்துபோய் விற்கிறதும், மார்க்கெட் உச்சியில் இருக்கும்போது பேராசையில் வாங்குவதும் மனித இயல்பு. ஆனால், பயம் மற்றும் பேராசை, இந்த இரண்டு உணர்ச்சிகளையும் யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்கள்தான் பங்குச்சந்தையில் ஜெயிக்க முடியும்.

2. The Parable of Mr. Market (மிஸ்டர் மார்க்கெட் கதை)

இந்தப் புத்தகத்தின் 8-வது சாப்டரில் வரும் ஒரு சூப்பரான கான்செப்ட் இது. நீங்கள் ஒரு அருமையான பிசினஸில் பார்ட்னராக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களோட இன்னொரு பார்ட்னர் பேருதான் மிஸ்டர் மார்க்கெட். இவருக்கு மனநலம் கொஞ்சம் சரி இல்லை. உங்க பிசினஸ் ரொம்ப ஸ்டேபிளாக சூப்பரா போயிட்டு இருக்கும், ஆனா இவருடைய மூட் தினமும் மாறும்.

மிஸ்டர் மார்க்கெட் தினமும் காலைல வந்து உங்களோட ஷேர்ஸை அவரு வாங்கிக்கிறேன்னு ஒரு பிரைஸ் சொல்லுவாரு, இல்லனா அவரோட ஷேர்ஸை நீங்கள் வாங்கிக்கோங்கன்னு ஒரு பிரைஸ் சொல்லுவாரு. எக்கனாமிக் கண்டிஷன் நல்லா இருக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருப்பார். ஆனால் நாட்டுல ஏதாவது பிரச்சனை, போர், இல்ல ரிசஷன் வந்துருச்சுன்னா ரொம்ப டிப்ரஸ் ஆகிடுவார். மார்க்கெட்டின் இந்த வாலட்டிலிட்டியை நீங்கள் ஒரு ரிஸ்க்காக பார்க்கக் கூடாது, அதை ஒரு அட்வாண்டேஜாக பார்க்க வேண்டும்.

3. The Margin of Safety (பாதுகாப்பு விளிம்பு)

சாப்டர் 20-ல் வரும் இந்த கான்செப்ட்டைத்தான் முதலீட்டின் ரகசியம் என்று சொல்கிறார்கள். Margin of Safety-னா என்ன? ஒரு கம்பெனியின் உண்மையான மதிப்பை விட, நாம் எவ்வளவு குறைவான விலைக்கு வாங்குகிறோம் என்பதுதான் இது.

எதிர்காலத்தை யாராலையும் நூறு சதவீதம் கணிக்க முடியாது. ஒரு கம்பெனியின் கேஷ் பிளோ குறையலாம், புதிய டெக்னாலஜி வரலாம். அதனால ஒரு கம்பெனியின் உண்மையான மதிப்பு நூறு ரூபாய் அப்படின்னா, அதை நீங்கள் அறுபது ரூபாய்க்கு வாங்குவதுதான் புத்திசாலித்தனம். இதுதான் வாரன் பஃபெட்டின் கோல்டன் ரூல். விதி ஒன்று: ஒருபோதும் பணத்தை இழக்காதீர்கள். விதி இரண்டு: விதி ஒன்றை ஒருபோதும் மறக்காதீர்கள்.

4. Investment is Most Intelligent When It Is Most Businesslike (வணிக மனப்பான்மை)

ஒரு ஷேர் வாங்குவதை கம்ப்யூட்டர் ஸ்கிரீன்ல ட்ரேட் ஆகும் ஒரு டிஜிட்டல் வேல்யூவாக பார்க்காதீர்கள். ஒரு உண்மையான பிசினஸில் நீங்கள் ஓனர் ஆகுறீங்க அப்படிங்கிற மைண்ட்2026-ல் மிகவும் அவசியமானது.

பப்ளிக் ஈக்விட்டீஸ், அதாவது ஷேர்கள் வாங்கும்போது இதே பிசினஸ் லைக் அப்ரோச்சைத்தான் நாம் ஃபாலோ பண்ணனும். ஒரு ட்ரை கிளீனர் கடையையோ இல்ல ஒரு பண்ணையையோ முழுசா வாங்கினா எப்படி அனலைஸ் பண்ணுவீங்களோ, அதே மாதிரிதான் ஒரு கம்பெனியின் ஷேர்ஸையும் அனலைஸ் பண்ணனும்.

5. The Distinction Between Price and Value (விலைக்கும் மதிப்புக்கும் உள்ள வித்தியாசம்)

இது ரொம்ப ரொம்ப முக்கியமான பாயிண்ட். “Price is what you pay, value is what you get”. மார்க்கெட்ல பிரைஸ் அப்படிங்கிறது அன்றைக்கு இருக்கிற லிக்யூடிட்டி, பயம், பேராசை, நியூஸ் இதெல்லாம் வச்சு ஃப்ளக்சுவேட் ஆகுற ஒரு நம்பர். ஆனா வேல்யூ அப்படிங்கிறது அந்த கம்பெனி அதோட லைஃப்டைமில் எவ்வளவு கேஷை ஜெனரேட் பண்ணும் அப்படிங்கிற உண்மையான ஃபண்டமெண்டல்ஸ்.

ஸ்பெகுலேட்டர்ஸ் எப்பவுமே விலையை மட்டும் பார்த்து சார்ட் வரைவாங்க. ஆனா இன்டெலிஜென்ட் இன்வெஸ்டர், விலை எங்கு போகுதுன்னு கவலையே பட மாட்டார், கம்பெனியின் இன்ட்ரின்சிக் வேல்யூ என்னன்னு மட்டும்தான் பார்ப்பார்.

6. The Voting Machine vs. The Weighing Machine (வோட்டிங் மெஷின் மற்றும் வெயிங் மெஷின்)

Short run-ல் மார்க்கெட் ஒரு வோட்டிங் மெஷின் மாதிரி செயல்படும். Long run-ல் அது ஒரு வெயிங் மெஷினாக மாறிவிடும். Short term-ல் எந்த கம்பெனி ரொம்ப பாப்புலராக இருக்கோ அதுக்கு நிறைய ஓட்டுகள் விழும். ஆனால் லாங் டெர்மில், ஒரு கம்பெனி கண்டிப்பாக லாபம் சம்பாதித்து அதோட இன்வெஸ்டர்ஸுக்கு டிவிடெண்ட்ஸாகவோ அல்லது குரோத் ஆகவோ கொடுத்துதான் ஆக வேண்டும்.

“Be fearful when others are greedy and greedy only when others are fearful” – Warren Buffett

7. The Evolution of the Framework (கட்டமைப்பின் பரிணாம வளர்ச்சி)

பெஞ்சமின் கிரஹாமின் பிலாசபியை வாரன் பஃபெட் அப்படியே நூறு சதவீதம் ஃபாலோ பண்ணல, காலத்துக்கு ஏத்த மாதிரி அதை அவர் எவல்யூ பண்ணாரு. சாதாரண கம்பெனிகளை ரொம்ப மலிவான விலைக்கு வாங்குவதை விட, மிகச் சிறந்த கம்பெனிகளை நியாயமான விலையில் வாங்குவதுதான் புத்திசாலித்தனம் (Buying wonderful businesses at fair prices) என்ற முடிவுக்கு வந்தார்.

உங்கள் யூடியூப் பயணம் மற்றும் கற்றல் தொடர

பங்குச்சந்தையை பற்றி இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ளவும், உங்கள் முதலீட்டு பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் எங்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலை பார்வையிடுங்கள். நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் பங்குச்சந்தையை கற்றுக்கொள்ள இன்றே இணைந்திடுங்கள்:

https://youtube.com/@iTamil

முடிவுரை

Value Investing in Tamil முறைகளைப் பின்பற்றி பங்குச்சந்தையில் நீண்ட கால வெற்றியை அடைய முடியும். மார்க்கெட்டின் மெக்கானிக்ஸ் எத்தனையோ மாறினாலும், மனிதர்களின் சைக்காலஜி மாறவே இல்லை. அதே பயம், அதே பேராசை இன்னைக்கும் மார்க்கெட்டை ஆபரேட் பண்ணிட்டு இருக்கு.

Book Appointment With Jeswyn: https://jeswyn.com/consult-trading-with-jeswyn/

Shopping: https://jeswyn.com/shop/

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

1. Value Investing என்றால் என்ன?

மதிப்பு முதலீடு (Value Investing) என்பதுintrinsic value-ஐ விட குறைந்த விலையில் பங்குகளை வாங்கி நீண்ட காலம் வைத்திருக்கும் உத்தியாகும்.

2. Benjamin Graham யார்?

இவர் வாரன் பஃபெட்டின் குரு மற்றும் ‘The Intelligent Investor’ புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். இவர் மதிப்பு முதலீட்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

3. Mr. Market கான்செப்ட் எதை விளக்குகிறது?

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பார்ட்னராக உருவகப்படுத்தி, சந்தையின் உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் இருக்க இது கற்றுக்கொடுக்கிறது.

4. Margin of Safety என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தின் உண்மையான மதிட்டிற்கும் நாம் வாங்கும் விலைக்கும் இடையே உள்ள பாதுகாப்பு இடைவெளியே Margin of Safety ஆகும்.

5. பங்குச்சந்தையில் நீண்ட கால வெற்றியை பெறுவது எப்படி?

சிறந்த வணிகங்களை அடையாளம் கண்டு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, சரியான விலையில் முதலீடு செய்வதன் மூலம் வெற்றியைப் பெறலாம்.

Jeswyn iTamil Academy

Jeswyn is a Financial Strategist and the Founder of Jeswyn Capital. Specializing in custom financial planning and wealth management, he is dedicated to helping individuals achieve financial clarity. He is also the educator behind iTamil Academy, where he simplifies complex investment concepts for the Tamil-speaking community.

Leave a Reply